பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (இன்று) காலை வெளியிடப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 29,528 மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுவையில் 6,89,687 மாணவ, மாணவியர் எழுதினர். கடலூர் மாவட்டத்தில் மாணவர்கள் 14,679 பேரும் மாணவிகள் 14,849 பேரும் பிளஸ்-2 தேர்வு எழுதி இருக்கிறார்கள்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் காலை 9 மணிக்கு முதலில் சென்னையில் வெளியிடப்படுகிறது.அதே நேரத்தில் கடலூர் மாவட்ட மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் வெளியிடப் படுகிறது. தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி வெளியிடுகிறார். இதற்காக விரிவான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் செய்து உள்ளது. தேர்வு முடிவுகளைப் பெற்றுச் செல்வதற்காக அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் கடலூருக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக