மாநிலம் முழுவதும் மாணவ- மாணவிகள் எதிர்பார்த்த பிளஸ் 2 ரிசல்ட் இன்று காலை வெளியிடப்பட்டது. 1187 மார்க்குகள் பெற்று தூத்துக்குடி எஸ்.வி., இந்து மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பாண்டியன் என்ற மாணவன் 1187 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். 1186 மார்க்குகள் பெற்று 3 மாணவர்கள் 2 வது இடத்தை பிடித்துள்ளனர். இதில் சந்தியா ( விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி பண்டமங்கலம் நாமக்கல் ) கிருஷ்ணகிரியை சேர்ந்த காருண்யா (எஸ்.வி., மந்திர் மேல்நிலைப்பள்ளி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி), தினேஷ் ( எஸ்.வி., மந்திர் மேல்நிலைப்பள்ளி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி) ஆகிய 3 பேர் 2 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
3 வது இடத்தை பிடித்தவர்கள் யார் ? யார் ? :
5 மாணவ, மாணவிகள் 3 வது இடத்தை பிடித்துள்ளனர் .
1. பிரவக்சனா ( சி.வி.பி.,ஏ.சி.ஆர்.ஆர்.,மெட்., பள்ளி ) ,
2. மனோசித்ரா ( குறிஞ்சி மெட்.,மேல்நிலைப்பள்ளி நாமக்கல்)
3. அபிநயா( பி.வி.பி.,மெட்ரிக்பள்ளி திண்டல் ஈரோடு ) ,
4. செங்கல்பட்டு ஸ்ரீவித்யா ( பிரின்ஸ் மெட்., மேல் நிலைப்பள்ளி மடிப்பாக்கம் செங்கல்பட்டு ) ,
5. அரியலூர் அண்டோ நசீரின் ( அரசு நகர் மேல்நிலைப்பள்ளி மெட்., மேல்நிலைப்பள்ளி, அரியலூர் )
ஆகியோர் 1185 மார்க்குகள் பெற்று 5 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடந்தது. 6 ,லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 85 .2 சத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முடிவுகள் வெளியானதும் மாணவ, மாணவிகள் தத்தம் பள்ளிகளில் குவிந்திருந்தனர். இதில் மாணவர்கள் , மாணவிகள் . பள்ளிகள் மூலமும், இணையதளம் மூலம் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும். கடந்த தேர்தலை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சதம் அதிகமாகும்.
தமிழ்ப் பாடத்தில் நாமக்கல் மாணவி முதல் இடம் :
பிளஸ் 2 தேர்வில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி.ஜி. மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிஷா, தமிழில் 197 மதி்பபெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். திருப்பத்தூர் மேட்டுக்குளம் வேலூர் சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் எம்.வெங்கடேஷ் ஆங்கிலத்தில் 196 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.பாண்டியன், இயற்பியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார்.
கணித பாடத்தில் 1862 பேர் 200க்கு 200 :
கணித பாடத்தில் 1862 பேர் 200க்கும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணித பாடத்தில் 4060 பேர் 200 மதிப்பெண்கள் பெற்றனர். இந்த ஆண்டு கணிதப் பாடம் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
மேலும், www.pallikalvi.in, tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge3.tn.nic.in, www.collegesintamilnadu.com போன்ற இணையதளங்கள் மற்றும் மொபைல் போன் மூலமாகவும் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக