கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் 2009-10 ஆம் ஆண்டிற்காக உத்தமர் காந்தி ஊராட்சி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
தமிழக அரசு கிராமங் கள் வளர்ச்சி பெற ஒவ் வொரு ஆண்டும் 15 சிறந்த ஊராட்சிகளை தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது. இவ்விருது கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறந்த பூர்வாங்க பணிகள், ஊராட்சி வருவாயை பெருக்குதல் மற்றும் புதிய முயற்சி மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்காக விருது வழங்கப்படுகிறது. விருதிற்கு தேர்வு செய்யப்படும் ஊராட்சிக்கு நற்சான்றிதழும், கேடயம், ஐந்து லட்சம் மதிப்பிலான வெகுமதியும் வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 2009-2010ம் ஆண்டிற்கு விருது பெற ஆர்வமுள்ள ஊராட்சி தலைவர்கள் 2004-05 முதல் 2008-09ம் ஆண்டு வரை உள்ள 5ஆண்டுகளில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பான நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வரும் ஜூன் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பரிசீலனை செய்து தகுதியான ஊராட்சிகள் அரசுக்கு பரிந்துரை செய் யப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக