கட லூர்:
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் போலியாக கூடுதல் ஆள்களைச் சேர்க்க மறுத்த மக்கள் நலப்பணியாளர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவரின் மகன்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லிக்குப்பம் அருகே எழுமேடு கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மக்கள் நலப்பணியாளர் கடவுள் குமார், புதன்கிழமை அப் பணியில் கணக்கெடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு எழுமேடு ஊராட்சி மன்றத் தலைவர் அபூர்வத்தின் மகன்களான சக்திவேல், புருசோத்தமன் ஆகியோர் வந்தனராம். ஊராட்சி மன்றத் தேர்தலில் அவர்கள் அதிகம் செலவு செய்து விட்டதாகவும், அதை சரிகட்ட வாய்க்கால் தூர்வாரும் பணியில் வேலை செய்த ஆள்களைவிட, கூடுதலாக 50 பேரை போலியாகச் சேர்த்து, அதற்கான பணத்தை தங்களிடம் வழங்க வேண்டும் என்று கோரினராம். இதற்கு கடவுள் குமார் சம்மதிக்கவில்லையாம். எனவே அவரை சக்திவேல், புருசோத்தமன் ஆகியோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்அங்கு வேலை செய்த ஆள்கள்,நெல்லிக்குப்பம் காவல் நிலையம் வந்து புகார் செய்தனர். போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, சக்திவேல், புருசோத்தமன் ஆகியோரை கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக