உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

பழுப்பு நிலக்​கரி லாரி​கள் வேலை​நி​றுத்​தம்


நெய்வேலி:
 
            நெய்வேலியில் இருந்து பழுப்பு நிலக்கரி ஏற்றிச்செல்லும் தனியார் லாரி உரிமையாளர்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நெய்வேலியில் இருந்து தமிழகம், ஆந்திர மாநிலத்திலுள்ள சிமென்ட் மற்றும் செங்கல் உற்பத்திக் கூடங்களுக்கு பழுப்பு நிலக்கரி எடுத்தும் செல்லும் பணியில் 80-க்கும் மேற்பட்ட லாரிகள் ஈடுபட்டுள்ளன. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, லாரியின் உதிரி பாகங்கள் விலை உயர்வு, சுங்க வரி அதிகரிப்பு, டிரைவர் மற்றும் கிளீனர் படி போன்றவை அதிகரித்துவிட்ட நிலையில், லாரிகளுக்கான வாடகையை சம்பந்தப்பட்ட சிமென்ட் மற்றும் செங்கல் உற்பத்திக் கூட நிறுவனங்கள் உயர்த்தித் தரவேண்டும் என லாரி உரிமையாளர்கள் பலமுறை வலியுறுத்தினர்.ஆனால், தனியார் நிறுவனங்கள் வாடகையை உயர்த்தவில்லை. இதையடுத்து தனியார் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
போராட்டம் குறித்து நெய்வேலி பாடி லாரி உரிமையாளர் சங்கப் பொருளாளர் இப்ராகிம் கூறுகையில்,
 
                "தமிழகம் முழுவதும் 20 சதவீத வாடகைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சிமென்ட் நிறுவனங்கள் இதுவரை எங்களுக்கான வாடகையை உயர்த்தாததால் நாங்கள் மிகுந்த நஷ்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதனால்தான் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரு தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் லாரி வாடகையை உயர்த்தாவிட்டால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior