உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

தகவல் தொழில் நுட்பத்தின் உதவியால் மாணவர்களை படிக்க தூண்ட வேண்டும்: சங்கரி

குறிஞ்சிப்பாடி :

                 ஆசிரியர்கள் தகவல் தொழில் நுட்பத்தின்  உதவியால் மாணவர் களை படிக்க தூண்ட வேண்டும் என இன்டல் நிறுவன துணை மேலாளர் பேசினார். வடலூர் ஓ.பி.ஆர். நினைவு கல்வியியல் கல்லூரியில் மாநில அளவில் கருத்தரங்கம் நடந்தது.

                வடலூர் ஓ.பி.ஆர். நினைவு கல்வியியல் கல்லூரியில் கல்வியின் தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பம் என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.  குருகுலம் பள்ளி தாளாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பேராசிரியர் டாக்டர் நெல்லையப்பன் கல்வியில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் பற்றி பேசினர்.பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சிங்காரவேலு தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார். 

இன்டல் நிறுவனத்தின் துணை மேலாளர் சங்கரி பேசியதாவது :

                   இன்று தகவல் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து விட்டது. செல்போன் இல்லாத மனிதர்களே இல்லை. இண்டர்நெட் மூலம் ஒரு நிமிடத்தில் அனைத்து தகவல்களையும் பெற முடிகிறது. ஆசிரியர்கள் வகுப்பறையில் என்ன நடத்த வேண்டும் என்பதை முன்னரே தயாரித்து இருக்க வேண்டும். இதை சில ஆசிரியர்கள் மட்டுமே கடைபிடிக்கின்றனர். சில ஆசிரியர்கள் பாடம் நடத்திய பின்னர் கூட பாடத் திட்டத்தினை தயாரிக்கின்றனர்.

                     ஆசிரியர்கள் தகவல் தொழில் நுட்பத்தின்  உதவியால் மாணவர்களை படிக்க தூண்ட வேண்டும். கடைசி பெஞ்சில் உள்ள மாணவர்களை ஆர்வமுடன் கற்க தூண்ட வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களையும் தங்கள் பிள்ளைகளையும் எப்படி உருவாக்க போகிறீர்கள் என்பதை நீங்கள் கொடுக்கும் தகவல்களை பொறுத்து அது அமையும்.திறமைகளை வைத்துக் கொண்டு மற்றவர்களிடம் விவாதம் செய்யுங்கள் என பேசினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் வந்திருந்த விரிவுரையாளர்கள், மாணவர்கள் தங்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஓ.பி.ஆர். கல்வியியல் கல்லூரி முதல்வர் பொன்மொழி சுரேஷ் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior