உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

அல்ஜீரியாவை வென்றது ஸ்லோவேனியா (1-0)

irst Published : 14 Jun 2010 01:13:24 AM IST

வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் ஸ்லோவேனியா வீரர்கள்
போலக்வானே:
 
               உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்லோவேனியா 1-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தியது. இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் போலக்வானேவில் உள்ள மொகபா கால்பந்து மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் துவக்கம் முதலே சிறப்பாக விளையாடி கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் முதல் பாதி ஆட்டம் வரை இரு அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. கிடைத்த ஒரு சில வாய்ப்புகளையும் இரு அணி வீரர்களும் தவறவிட்டனர்.இதையடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டனர். இருப்பினும் கோல் அடிக்கும் முயற்சி பலிக்கவில்லை. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் அல்ஜீரிய வீரர் அப்டேல்காடர் கெஸ்ஸôல் ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் ஆடவேண்டிய நிலை ஏற்பட்டது. இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஸ்லோவேனியா வீரர்கள் அபாரமாக ஆடி கோல் அடிக்க முயற்சித்தனர். அந்த முயற்சிக்கு ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. ஸ்லோவேனியா வீரர் ராபர்ட் கோரன் 25 அடி தூரத்தில் இருந்து  கோல் அடித்து ஸ்லோவேனியாவை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெறச்செய்தார்.இதையடுத்து ஸ்லோவேனியா வீரர்கள் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியதால் அல்ஜீரியா வீரர்களின் கோல் அடிக்கும் கனவு தகர்ந்தது. இறுதியில் ஸ்லோவேனியா 1-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தியது.இந்த ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் ஸ்லோவேனியா வீரர் அலெக்சாண்டர் ரேடோசாவ்ஜெவிக்கிற்கும், 59-வது நிமிடத்தில் அல்ஜீரியா வீரர் அப்டேல்காடர் கெஸ்ஸôலுக்கும், 90-வது நிமிடத்தில் அல்ஜீரியா வீரர் ஹசன் யெப்தாவிற்கும், ஸ்லோவேனியா வீரர் ஆன்ட்ரெஜ் கோமேவிற்கும் யெல்லோ கார்டு காண்பிக்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது. 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior