உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

தமிழகத்தில் இந்த ஆண்டு 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 இடங்களுக்கு மட்டுமே கவுன்சலிங்



 
              தமிழகத்தில் இந்த ஆண்டு 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மட்டுமே முதல் கட்ட கவுன்சலிங் நடத்தப்படும்.  சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் வரும் ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது. இந்திய மருத்துவக் கவுன்சிலின் புதிய குழு, தருமபுரி-விழுப்புரம்-திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் இந்தக் கல்லூரிகளில் முதல் கட்ட கவுன்சலிங்கின்போது மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள். 
 
நம்பிக்கை:
 
               எனினும் தருமபுரி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதால், இந்தக் கல்வி ஆண்டிலேயே மாணவர்களைச் சேர்க்க அனுமதி கிடைத்துவிடும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். 
 
சிறப்புப் பிரிவினருக்கு...: 
 
               சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 28-ம் தேதி ரேங்க் பட்டியலில் சிறப்பிடம் பெற்றுள்ள 13 மாணவ-மாணவியருக்கு சேர்க்கை கடிதம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு கவுன்சலிங் நடத்தி எம்.பி.பி.எஸ். அனுமதிக் கடிதம் வழங்கப்படும். எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் ஜூன் 28-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும். 
 
சுயநிதி எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் எப்போது?
 
             தருமபுரி, விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை மற்றும் 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஜூலை 3-வது வாரத்தில் 2-ம் கட்ட கவுன்சலிங் நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior