பண்ருட்டி;
பண்ருட்டி நகராட்சி துவக்கப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான ஆய்வுப் பணி நடந்தது.
பண்ருட்டியில் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை சி.இ.ஓ., அமுதவல்லி, தாசில்தார் ஆகியோர் பார்வையிட்டு தேர்வு செய்தனர். முதல் கட்டமாக விழமங்கலம் நகராட்சி துவக் கப் பள்ளியை பெண்கள் உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ஒரு லட்சம் ரூபாய் பொதுமக்கள் பங்களிப்பாக வழங்க கேட்டுக் கொண்டனர். மேலும் உயர்நிலைப் பள்ளிக்கு தேவையான இடத்தை பக்கத்தில் உள்ள கோவில் டிரஸ்டுக்கு சொந்தமான இடத்தை வாங்கவும் முடிவு செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து டி.இ.ஓ., கணேசமூர்த்தி (பொறுப்பு) பள்ளிக்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன், தொழிலதிபர் வைரக்கண்ணு, அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன், தி.மு.க., கவுன்சிலர் தட்சணாமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக