உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

கடலூர் சில்வர் பீச்சில் நெய்வேலி மாணவி சாவு

கடலூர்:
 
                     கடலூர் சில்வர் பீச்சில் சனிக்கிழமை கடலில் குளித்த நெய்வேலி மாணவி அலைகளில் சிக்கி உயிரிழந்தார். மற்றொரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் முருகேசன், செல்வராஜ். இவர்களின் குடும்பத்தினர் சனிக்கிழமை கடலூர் சில்வர் பீச்சுக்கு சுற்றுலா வந்தனர். செல்வராஜின் உறவினர் மாரிமுத்து (25) உதவியுடன் இரு குடும்பங்களையும் சேர்ந்த சிறுமிகள் கடலில் குளித்தனர். அப்போது திடீரென அலைகளில் சிக்கி, முருகேசன் மகள் கீர்த்தனா (13), செல்வராஜ் மகள் சோபனா (13) மற்றும் மகாலட்சுமி, கலைச்செல்வி ஆகியோர் கடலில் மூழ்கினர்.அவர்களில் மகாலட்சுமி, கலைச்செல்வி, சோபனா ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். 
 
                        ஆனால் கீர்த்தனா கடலில் மூழ்கி இறந்தார். அவரது சடலம் மீட்கப்பட்டது. சோபனா உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, புதுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இறந்துபோன கீர்த்தனா காப்பாற்றப்பட்ட சோபனா ஆகியோர் நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிகள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior