கடலூர்:
கடலூர் அருகே அனுமதியின்றி கிராவல் எடுத்த டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கடலூர் அடுத்த புருகீஸ்பேட்டையில் கொண்டங்கி ஏரியின் ஒரு பகுதியின் கரை அமைத்துள்ளது. இந்த பகுதியில் உள்ள சிறிய மலையை தனியார் குவாரிக்கு சாலை அமைப்பதற்காக ஜே.சி.பி., இயந்திரம் மூலம் செம்மண் கிராவல்கள் உடைத்து லாரியில் ஏற்றப்பட்டது. உடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கிராவல்களை வெட்டி எடுப்பதால் கொண்டங்கி ஏரி கரை பலவீனமாகும் என்பதை தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தி கடலூர் தாசில்தாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தாசில்தார் தட்சணா மூர்த்தி நேரில் சென்று விசாரணை நடத் தினார். விசாரணையில் அனுமதியில்லாமல் பாதை அமைத்ததும். மேலும் அந்த பகுதியில் இருந்த கிராவல்களை அப்புறப்படுத்தியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து லாரி மற்றும் ஜே.சி.பி., ஆகியவற்றை தாசில்தார் கைப்பற்றி கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தார். மேலும் இது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உட்படுத்தப் பட உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக