உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

பி.இ.: நாளை ரேண்டம் எண் வெளியீடு

         பி.இ. படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) முன்னுரிமை வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்படவுள்ளது.

                  பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், www.ann​auniv.edu என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு தங்களது ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழகங்கள், அவற்றின் உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் (அரசுக்கு ஒதுக்கீடுக்கு அளிக்கப்பட்ட இடங்கள்) ஆகியவற்றில் 2010-11 கல்வி ஆண்டில் பி.இ. படிப்புகளில் சேருவதற்கு 1,67,560 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பி.இ. தரவரிசைப் பட்டியலில் ஒரே மாதிரியான கட்ஃஆப் மதிப்பெண்ணை எடுத்துள்ள பல மாணவர்களில் ஒருவருக்கு பி.இ. இடத்தைத் தேர்வு செய்ய முன்னுரிமை அளிப்பதற்காக ரேண்டம் எண் பயன்படும். 

                   ரேண்டம் எண்ணைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, மாணவர்களின் கணித மதிப்பெண்  சதவீதம் முதலில் பார்க்கப்படும். இதில் மாணவர்கள் ஒரேமாதிரி மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களின் இயற்பியல் மதிப்பெண் பார்க்கப்படும். அதிலும் ஒன்றாக இருந்தால் அவர்களின் 4-வது விருப்பப் பாட (உயிரியல் அல்லது கணினி அறிவியல் போன்ற பாடங்கள்) மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்படும். அதிலும் ஒரே மாதிரி இருந்தால் மாணவர்களின் பிறந்த தேதி கணக்கிடப்படும். இவை எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக இருந்தால் கடைசியாக முன்னுரிமை வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) பயன்படுத்தப்படும்.  பி.இ. விண்ணப்பங்களுக்கு கணினி மூலம் ஒரே நேரத்தில் முன்னுரிமை வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு வழங்கப்படவுள்ளது. இதில் உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி, உயர்கல்வி முதன்மைச் செயலர் க. கணேசன், துணைவேந்தர் மன்னர் ஜவஹர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior