சிதம்பரம்:
சிதம்பரம் நகர சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக மனித உரிமைகள் கழக கடலூர் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவருமான லோக.நடேசன் உள்ளிட்ட 5 பேரை போலீஸôர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்." கடலூர் சாசன் கெமிக்கல் கம்பெனியின் கைக்கூலியாக செயல்படும் கடலூர் எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி.யை பணிநீக்கம் செய்ய வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை லோக.நடேசன் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலக காம்பவுண்ட் சுவரில் ஒட்டியதாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீஸôர் போஸ்டரை ஒட்டக் கூடாது எனக் கூறி தடுத்தனராம். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், சப்-இன்ஸ்பெக்டருக்கு லோக.நடேசன் உள்ளிட்ட 5 பேர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் நகர போலீஸôர் வழக்குப் பதிந்து லோக.நடேசன் (58), குமாரவேல் (28), பிரேம்ஆனந்த் (34), வாசுதேவன் (35), ஆனந்த் (35) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக