உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.டெக். மாணவர் சேர்க்கைதரவரிசைப் பட்டியல் வெளியீடு

            தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 2010-2011 ஆம் ஆண்டுக்கான பி.டெக். மாணவர் சேர்க்கைக்கு தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.  

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். சேதுராமன் வெளியிட்ட செய்திக்  குறிப்பு:   

                   தரவரிசைப் பட்டியலில் திருநெல்வேலி ஸ்ரீஜயேந்திரர் கோல்டன் ஜூப்ளி மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர். வெங்கடகிருஷ்ணன் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1200-க்கு 1185 மதிப்பெண்களுடன் 99.75 சதம் பெற்று முதலிடம் பெற்றார்.  சென்னை என்.எஸ்.என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சி. லட்சுமி 1200-க்கு 1183 மதிப்பெண்களுடன் 99.58 சதம் பெற்று இரண்டாமிடமும், திருச்சி சாவித்ரி வித்யா சாலா மேல்நிலைப் பள்ளி மாணவி கெட்சி பிரதிபா 1200-க்கு 1182 மதிப்பெண்களுடன் 99.49 சதம் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.  இந்தத் தகுதிப் பட்டியல் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 70 சதம் இடங்களுக்குரியது. மீதமுள்ள 30 சதவீத இடங்களில் அகில இந்தியப் பொறியியல் நுழைவுத் தேர்வு தகுதிப் பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.  கலந்தாய்வு ஜூன் 21 முதல் 24 ஆம் தேதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. நேரம், இடம் குறித்த விவரங்கள் மாணவர்களுக்கு தனித் தனியாகக் கடிதம் மூலம் அனுப்பப்படுகிறது. மேலும் தரப்பட்டியலை http://www.sastra.edu/rnk2010/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 30 சதவீத இடங்களுக்கு சாஸ்த்ரா இணையதளத்தில் ஜூன் 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கலந்தாய்வு ஜூலை 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior