கடலூர்:
கடலூர் அடுத்த வெள்ளக்கரை கிராமத்தில் தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் "அக்ரி கிளினிக்' மற்றும் மினி மண் பரிசோதனை நிலையம் திறப்பு விழா நடந்தது.
ஒன்றியத் தலைவர் விஜயராகவன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ராஜலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் துவக்கி வைத்து, மண் பரிசோதனைக்கான நவீன சாதனங்களை பார்வையிட்டார். மாவட்ட வேளாண் துணை இயக்குனர் பாபு, கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மணி, உதவி இயக்குனர் சீனிவாசன், இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் பாண்டியன், வேளாண் அலுவலர் சின்னக்கண்ணு, பூவராகன், பூங்கோதை, ஜெயக்குமார், தோட்டக்கலை அலுவலர் முனுசாமி, கரும்பு ஆலை தனி அலுவலர் சுரேஷ், தொழில் முனைவர் பாலு உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் தெய்வசிகாமணி, பரமசிவம் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக