உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 09, 2010

ராஜபட்ச வருகையை கண்டித்து தடையை மீறி கருப்புக் கொடி:108 பேர் கைது

சிதம்பரம்:

                 இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்தியா வருகையைக் கண்டித்து சிதம்பரத்தில் தடையை மீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 108 பேரை நகர  போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

                    இலங்கை அதிபர் ராஜபட்சவின் வருகையைக் கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகே மதிமுக. தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. இதற்கு  போலீசார் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை போலீஸ் தடையை மீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மதிமுக மாவட்டச் செயலாளர் சௌ.பத்மநாபன், அரசியல் ஆய்வு மையத் தலைவர் மு.செந்திலதிபன், வெளியீட்டு அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், நகரச் செயலாளர் க.சீனுவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி.மணிவாசகம், நகரச் செயலாளர் வி.எம்.சேகர், தமிழ் தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.எஸ்.லோகநாதன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 பேரை நகர  போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி சிதம்பரம் டிஎஸ்பி மா.மூவேந்தன், சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior