தமிழகம் மற்றும் புதுவையில் பருவ மழை தொடங்கி இருப்பதால், மீண்டும் சிக்குன் குனியா தலை தூக்கும் அபாயம் உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக கடும் வெயில். தண்ணீர் இல்லையென்றால் கொசுக்களும் அதிகம் உருவாகாது. கொசு பிரச்னை குறைந்ததால் எதிர் கட்சிகளின் கோஷங்களைக் கேட்காமல் இப்போது ஆளும் அரசுகள் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கிறது. இப்போது பருவ மழை தொடங்கியுள்ளது.
புதுவை நோய்க்கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய இயக்குநர் பி.ஜம்புலிங்கம் கூறியது:
சிக்குன் குனியாவை ஒழிப்பது மக்கள் கையில் உள்ளது. சிக்குன் குனியா நோய் பரப்பும் கொசுக்கள் முழுக்க முழுக்க வீட்டையும், வீட்டை சுற்றியும் உள்ள இடங்களில் உருவாவதால், இந்நோயை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்தான் ஒழிக்க முடியும். நம் வீட்டை சுற்றி சிறு சிறு அளவில் மழை நீர் தேங்கும் அளவுக்கு வாய்ப்புகள் இருந்தால் அதில் சிக்குன் குனியா நோயை பரப்பும் கொசுக்கள் உருவாகும். யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சல், மலேரியா போன்றவை பரப்பும் கொசுக்கள் இறந்தவுடன் அதனுள் இருக்கும் கிருமி அதோடு அழித்து விடும். ஆனால் சிக்குன் குனியா வைரஸ், கொசு வைக்கும் முட்டையிலும் இருக்கும். இதில் உருவாகும் கொசு, இந்த வைரûஸ தாங்கியே வளரும் என்றார். கொசு உருவாகும் புதிய வழிகள்: மரக்கன்று நடும்போது அதன் பாதுகாப்புக்கு வைக்கப்படும் வலைகள், கன்று மரமாகும்போது அதை யாரும் நீங்குவதில்லை. இது அகற்றப்படாத நிரந்தர குப்பைத் தொட்டிகாய மாறி வருகிறது. இதில் பலர் டீ கப்புகள், பிளாஸ்டிக் பொருள்களை போட்டுவிடுகின்றனர். இந்த வலைகள் சிக்குன் குனியா கொசுவை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையாக உள்ளது. சிக்குன் குனியா மற்றும் டெங்கு ஒழிப்பில் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. கொசுப் பிரச்னையை எதிர்கட்சிகள் அரசியலாக்க ஆர்ப்பாட்டம் நடத்தலாம். தொண்டர்களின் சக்தியை, ஆர்ப்பாட்டத்தில் வீணடிக்காமல், அதை களப்பணியாக மாற்றலாம். களப்பணி மூலம் ஒவ்வொரு வீடாக சென்று மழை நீர் தேங்க வாய்ப்புள்ள ஆதாரங்களை அழிக்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக