கடலூர் :
கடலூரில் அனுமதியின்றி கிளிஞ்சல் கடத்திய லாரியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். கடலூர் தாழங்குடா அருகே உள்ள பெண்ணையாற்றை ஒட்டியுள்ள உப்பனாறு அருகே நேற்று மதியம் லாரி ஒன்று மணலில் சிக்கிக் கொண்டது. அதனை மீட்க அப்பகுதியினர் உதவச் சென்றபோது, உப்பனாற்றில் இருந்து அனுமதியின்றி கிளிஞ்சல் கடத்தப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தாசில்தார் தட்சணாமூர்த்தி, வி.ஏ.ஓ., பன்னீர்செல்வம் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து சென்று அனுமதியின்றி கிளஞ்சல் ஏற்றி நின்ற லாரியை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக