விருத்தாசலம்:
ராஜபட்சவைக் கண்டித்து விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத்தாசலம் பாலக்கரையில் நாம் தமிழர் கட்சி சார்பில், இந்தியாவுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபட்சவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் 10 பேரை விருத்தாசலம் போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து திருமாவளவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்தும், விருத்தாசலம் பாலக்கரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் ராசாமுகமது உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக