சிதம்பரம்:
செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வியில் ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால் தரமான கல்வி பெற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து பயன்பெற வேண்டும் என்று புவனகிரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.1-ம் வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் குழுவில் அமர்ந்து அட்டைகளைப் பயன்படுத்தி செயல்வழிக் கற்றல் முறையிலேயே கல்வி பயிலுவார்கள். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என ஆ.கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக