உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 09, 2010

அரசு செய்த உதவியை மறக்காமல் இருக்க வேண்டும்: எம்.எல்.ஏ., அய்யப்பன்

கடலூர் : 

                அரசு செய்த உதவியை மறக்காமல் இருக்க வேண் டும் என திருமண உதவி தொகை வழங்கும் விழாவில் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். கடலூர் அரசு சேவை இல்லத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தில் பயனாளிகளுக்கு காசோலை வழங் கும் விழா நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். சேர்மன் தங்கராசு முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் தாமரைச்செல்வன், கவுன்சிலர்கள் நவநீதம் சாமுவேல், இளங்கோ, சமூக நல அலுவலக கண் காணிப்பளர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் 69 பேருக்கு தலா 20 ஆயிரம் வீதம் 13.80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசியதாவது:

                      மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவித் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு தற் போது 25 ஆயிரம் ரூபாயாக வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.தற்போது பணம் பெற வந்துள்ள பயனாளிகள் 6 மாதத்திற்கு முன் விண்ணபித்திருந்ததால் இவர்களுக்கு பழையத் தொகையான 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. திருமணத்திற்காக சிரமப்படும் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் கொண்டு வந்த இந்த திட்டத்திற்காக நிதி உதவி வழங்குவதை பெருமையாக கருதுகிறோம். கடலூர் பகுதியில் சாலைகள், பாலங்கள் என பல்வேறு திட்டங்கள் மக்களுக்காக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முதல்வராக இருந்த பலர் செயல்படுத்த முடியாத திட்டங்களை முதல்வர் கருணாநிதி ஏழைகளின் நிலை அறிந்து பல்வேறு இலவச திட்டங்களையும், மாணவர்களுக்கு கல்வி முதல், "கான்கிரீட்' வீடுகள் திட்டம் வரை நிறைவேற்றி வருகிறார். அரசு செய்து வரும் உதவியை மறக்காமல் முதல்வர் கருணாநிதியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior