விருத்தாசலம் :
ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அதிக வருவாய் வந்ததாக கோட்ட வேளாண் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விருத்தாசலம் கோட்ட வேளாண் அலுவலர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விருத்தாசலம் கோட் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் கிராமங்களில் விளைபொருள் குழுக்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரிடையாக ஒழுங்கு முறை விற்பனை கூடத் தின் மூலமாக விற் பனை செய்வது பற்றியும், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து தேவைப்படும் நிறுவனங்கள் நேரிடையாக விவசாயிகளிடையே கொள்முதல் செய்யவும், விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத் தில் சென்ற 2008- 09 ஆண்டில் 54 ஆயிரத்து 893 டன்களாக இருந்த வரத்து, 2009-10ல் 67 ஆயிரத்து 458 டன்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனை கூடத்தின் வருவாய் 93 லட்சத்து 44 ஆயிரத்து 762 லட்சத்தில் இருந்து 1 கோடியே 18 லட்சத்து 25 ஆயிரத்து 980 ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக