உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 09, 2010

ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பால பணி... துவங்குமா? டூ ரூ.17.5 கோடி ஒதுக்கியும் பயனில்லை

சிதம்பரம் : 

                           விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதையில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் 17.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அந்த திட்டம் கைவிடப்பட்டது. ரயில் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில் அடிக்கடி கேட் மூடப்படுவதால் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

                      விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகல ரயில்பாதை அமைக்கும் பணி நீண்ட போராட்டத்திற்கிடையே முடிக்கப்பட்டு தற்போது ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளது. இந்த பாதையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் - கடலூர் நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக சிதம்பரம் மார்க்கமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கடலூர் மார்க்கமாக சென்னை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளுக்கும் அடிக்கடி வாகனங்கள் சென்று வருகிறது. ஆலப் பாக்கம் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
 
                       இதனைக் கருத்தில் கொண்டு பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை திட்டத்தில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் மேம்பாலம் 17 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட் டுள்ளது. ஆனால் ரயில்வே பாதையில் பல இடங்களில் பாலம் கட்டப்பட்ட போதும் ஆலப்பாக்கம் ரயில்வே பாலம் கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. சர்வே பணி, மண் ஆய்வு போன்ற பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணிகள் முடிந்து ரயில் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில் ரயில் கிராசிங் நேரங்களில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்துக்கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப் பற்ற காடு போன்ற இடத் தில் வாகனங்கள் நிற்பதால் பயணிகள் அச்சத்துடன் உள்ளனர்.ஆலப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்ட திட்டம் உள் ளது, விரைவில் கட்டப்படும் என விழுப்புரம் கோட்ட நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்தார். ஆனால் அதற் கான திட்டம் எங்கே போனது, ஏன் கட்டப்படவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. இதே விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில் பாதையில் சீர்காழி அருகே அரசூர் ரயில்வே "கேட்' பகுதியில் மேம்பாலம் அமைக் கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.

                  கடலூர் - விருத்தாசலம் சாலையில் கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் ரயில்வேகேட் அருகே 12 கோடி ரூபாய் மதிப் பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.ஆனால் முக்கிய தேவையான ஆலப்பாக்கம் பாலம் மட்டும் கட்டப்படவில்லை. ரயில்வே பாலம் இல்லாததால் வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மட்டுமல்லாது, கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதிகளில் பணிக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் பாதிக்கின்ற நிலை உள்ளது. எனவே கைவிடப்பட்ட ஆலப்பாக்கம் ரயில்வே கேட் மேம்பால திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்து போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி தடையற்ற சீரான போக்குவரத் திற்கும், பொதுமக்களுக் கும் உதவிட வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior