கடலூர்:
கடலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 44 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடலூரில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் டவுன்ஹால் அருகில் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு கட்சியின் இளம்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலாளரும் நகராட்சி துணைத் தலைவருமான தாமரைச் செல்வன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர்கள் முல்லைவேந்தன், அறிவுடை நம்பி, திருமேனி, தமிழ் தேசிய விடுதலை இயக்க மாநில துணைச் செயலாளர் திருமார்பன், கடலூர் நகரச் செயலாளர் பாவாணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவுக்கரசு மற்றும் நிர்வாகிகள் கோபால், பாலகிருஷ்ணன், செந்தில், முரளி, பிரபு, ஆதவன், சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட 44 பேரைப் போலீஸôர் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக