கடலூர் :
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மதில் சுவர்கள் இல்லாமல் உள்ளதால் இரவு நேரத்தில் சமுக விரோதிகள் அமர்ந்து மது அருந்தும் இடமாக மாறி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் இருப்பது விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்களுக்கு குறையாகவே இருந்து வருகிறது. ஆனால் கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கம் விளையாட்டு வீரர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைத்துள்ளதை மறுக்க முடியாது.
இங்கு கால் பந்து, கைப்பந்து, கிரிக்கெட், இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம், டென்னிஸ், நீச்சல் குளம், பிற மாவட்டங்களில் இல்லாத அளவில் குவாஷ் அரங்கம் மற்றும் தடகள போட்டிகளுக்கு ஏற்ப ஓடுதளங்கள், பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சியில் ஈடுபடுவதற்கான தனியாக நடை பாதை என அனைத்து வசதிகளும் உள்ளது. தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விளையாட்டரங்கில் பயிற்சி பெற்ற பலர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளனர். இப்படிப்பட்ட விளையாட்டரங்கம் தற்போது பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. அரங்கை சுற்றியுள்ள மதில் சுவர் இடிந்து விழுந்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனை ஒருவரும் கண்டு கொள்ளாததால் இரவில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து நடைபாதை விளக்குகள் மற்றும் ஒயர்களை திருடிச்செல்வது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடைபயிற்சி பாதையில் அமர்ந்து மது அருந்துவதும் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் சுற்றுச்சுவர் எழுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக