உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 09, 2010

முற்றுகை போராட்டம்: மனித உரிமை தொழிற்சங்கத்தினர் 40 பேர் கைது

கடலூர்:

                     கடலூரில் தொழிற்சாலை முன் முற்றுகைப் போராட்டம் நடத்திய மனித உரிமைகள் கழக தொழிற்சங்கத்தினர் 40 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

                     கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சாஷன் தொழிற்சாலையில் 2 ஆண்டுகளுக்கு முன் மனித உரிமைகள் கழக தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. தொழிற்சங்கம் தொடங்கப்பட்டதன் காரணமாக, அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் துரைசாமி, மனோகரன், ஜெயக்குமார், ராமலிங்கம் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கு ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் பஞ்சப்படி வழங்க வேண்டும், தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனித உரிமைகள் கழக தொழிற்சங்கத்தினர் கடந்த 1-ம் தேதிமுதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். 

                      மனித உரிமைகள் கழக தொழிற்சங்க மாநில அமைப்பாளர் மேட்டூர் ராமசுப்பன், செயலாளர் மதுரை முருகேசன் ஆகியோர் தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை 8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த தொழிலாளர்கள் சுமார் 50 பேர், தொழிற்சாலை முன் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலர்களும் தொழிலாளர்களும் தொழிற்சாலைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் போலீஸôர் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர். மனித உரிமைகள் கழக தொழிற்சங்கத்தின் மாநில அமைப்பாளர் ராமசுப்பன், செயலாளர் முருகேசன், கடலூர் மாவட்டத் தலைவர் ராஜகோபால், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயபாலன் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் முதுநகர் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இருந்த அவர்களை, மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பாளர் சுரேஷ் கண்ணன் சந்தித்துப் பேசினார். தொழிலாளர்கள் பணிநீக்கம் மனித உரிமைகளை மீறிய செயல்ஆகும். அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். பணிநீக்கம் செய்யப்பட்ட 4  தொழிலாளர்களையும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் போராட்டம் தீவிரம் அடையும் என்று அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior