கடலூர் :
உலக வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு பள்ளிகளில் பசுமை போர்வை ஏற்படுத்த மரக்கன்றுகள் நடும் விழா கடலூரில் நடந்தது.அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டியும், உலக வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டும் பள்ளிகளில் பசுமை போர்வை ஏற்படுத்துதல் தொடக்க விழா திருவந்திரபும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி வரவேற்றார். மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் சேகர் முன் னிலை வகித்தார்.ருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சேஷாத்திரி, ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டது.மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் பழநி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக