விருத்தாசலம் :
விருத்தாசலத்தில் நூலகம் கட்ட இடம் தேர்வு செய்து தரக்கோரி வாசகர் வட்டம் சார்பில் விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது.
இதுகுறித்து அரசு நூலக வாசகர் வட்ட தலைவர் முருகன் விடுத்துள்ள அறிக்கை:
விருத்தாசலம் அரசு கிளை நூலகம் 30 ஆண்டிற்கு மேலாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. நூலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினரின் ஒத்துழைப்போடு பல இடங்கள் தேர்வு செய்த போதிலும், பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. இறுதியாக காட்டுகூடலூர் ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு நகராட்சி நிர்வாகத்தின் ஒப்புதலோடு தயாரான ஆவணங்கள் சி.இ.ஓ., வின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பள்ளிக்குரிய இடத்தை நூலக கட்டடம் கட்ட தர வேண்டாம் என கல்விதுறை இயக்குனர் அறிவுறுத்தியதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே புதிய நூலகம் கட்டுவதற்கு அரசே இடத்தை தேர்வு செய்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி வாசகர் வட்டம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. போராட்ட தேதி வாசகர் வட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக