கடலூர் :
கடலூர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் பல நூறு டன் எடையுள்ள பொருட்கள் மண்ணில் மக்கி வீணாகிக் கொண்டிருக்கிறது.
கடலூர் அடுத்த சின்னகங்கணாங்குப்பத்தில் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் விவசாயத்திற்குத் தேவையான இயந்திரங்கள், கருவிகள், உபகரணங்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. இதில் கனரக வாகனங்களான புல்டோசர், அறுவடை இயந்திரம் போன்ற இயந்திரங்களும் அடங்கும்.இயந்திரங்களின் பழுதான பொருட்கள் பல 100 டன் எடையுள்ள இரும்பு செயின் போன்றவை திறந்த வெளியில் மக்கி வீணாகிக் கொண்டிருக்கின்றன. அதற்கு ஒரு உதாரணமாக டிராக்டருக்கு பயன்படுத்தும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள "கேஜ்வீலை' கூட தென்னங்கன்றின் வேலிக்கு பயன்படுத்தியுள்ளனர். அரசின் புதிய உத்தரவால் வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் கூட மக்கி வீணாவதைவிட ஏலத்தில் விட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கும்போது அரசின் பல லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்கள் மக்கி வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக