நெய்வேலி :
என்.எல்.சி., நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கான புற்றுநோய் கண்டறியும் முகாம் நடந்தது.
என்.எல்.சி.,யில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் சோதனை மேற்கொள்ள என்.எல்.சி., பொது மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்தது. சென்னை காமாட்சி நினைவு மருத்துவமனை சார்பில் நடந்த முகாமை என்.எல்.சி., சேர்மன் அன்சாரி துவக்கி வைத்தார்.
காமாட்சி மருத்துவமனையின் மகப்பேறியல் மருத்துவ நிபுணர் டாக்டர் கல்பனா தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங் கேற்ற ஆயிரத்து 57 பெண்களை பரிசோதித்தனர்.
காமாட்சி மருத்துவமனையின் மகப்பேறியல் மருத்துவ நிபுணர் டாக்டர் கல்பனா தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங் கேற்ற ஆயிரத்து 57 பெண்களை பரிசோதித்தனர்.
முகாமின் நிறைவு விழாவிற்கு தலைமை தாங்கிய என்.எல்.சி., பொது மருத்துவமனையின் முதன்மை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பேசுகையில்,
கடந்த 20 ஆண்டாக புற்றுநோய் குறித்த சிறப்பு பரிசோதனைகளை என்.எல். சி., பொது மருத்துவமனை நடத்தி வருகிறது. தற்பொழுது புற்றுநோய் பரிசோதனைக்கான சிறப்பு கருவிகள் உள்ளது. மேலும், பெண் மருத்துவ நிபுணர்கள் கூடுதலாக நியமித்துள்ளதால் இங்கேயே அனைத்து சோதனைகளும் செய்து கொள்ளலாம் என்றார்.
சிறப்பு விருந்தினர் சேர்மனின் மனைவி கிஷ்வர் சுல்தானா பேசுகையில்,
பெண்கள் பொதுவாக தங்கள் உடல் நலன் குறித்து கவலைப்படுவதில்லை. குறிப்பாக பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகம், வீடு என இருபக்கத்திலும் வேலை பளு இருப்பதால் உடல் நலன் குறித்து கவனிக்க நேரமிருப்பதில்லை. எனவே இதுபோன்ற அனைத்து பரிசோதனைகளும் ஒரே இடத்தில் நடத்தியது பெண் ஊழியர்களுக்கு மிகவும் பயனளித்துள்ளது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக