கடலூர் :
தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர் சங்க கடலூர் மண்டலக் கூட்டம் டவுன்ஹாலில் நடந்தது.
மாநிலத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திரன், அன்பானந்தன், சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். கடலூர் மண்டல செயலாளர் ரவி வரவேற்றார். நிறுவனர் சுப கோவிந்தராஜன், பிரசார செயலாளர் கருணாகரன் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், கூட்டுறவு தணிக்கைத் துறையில் தற்போது 40 சதவீதத்திற்கும் மேல் உள்ள காலிபணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். பதவி உயர்வு பெற்று தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 330க்கும் மேற்பட்ட முதுநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள், கூட்டுறவு தணிக்கை அலுவலர்களுக்கு அரசின் பரிசான 500 ரூபாய் கிசான் விகாஸ் பத்திரம் வழங்க கூட்டுறவு தணிக்கை இயக் குனரை கேட்டுக் கொள்வது. புதிய ஊதியம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த குறைபாடுகளை போக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு நபர் கமிஷனின் அறிக்கையை விரைந்து அமல்படுத்த தமிழக அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக