கடலூர் மாவட்ட செய்திகள் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! தினசரி செய்தித்தாள்களில் வந்த கடலூர் மாவட்ட செய்திகள் (தொகுத்து வழங்குவது முன்னாள் மாணவர்கள், தாவரவியல் துறை 2004-2007,
பெரியார் கலைக் கல்லூரி - கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
திட்டக்குடி:
திட்டக்குடியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கக் கோரி மாவட்ட கவுன்சிலர் எழிலரசன் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினார்.
மனு விவரம்:
கடலூர் மாவட்டத்தில் மங்களூர் ஒன்றியம் மிகவும் பின்தங்கிய ஒன்றியமாக உள்ளது. மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சிகளும் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறாமல் உள்ளது.மேலும் ஏழை மாணவ, மாணவியர்கள் பட்டப்படிப்பு பயில கல்லூரிகள் திட்டக்குடி பகுதியில் இல்லாததால்...
விருத்தாசலம்:
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில், என்.எஸ்.எஸ்., திட்டம், அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் கோவிந்தன் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் (பொறுப்பு) சந்திரகுமார், கமிஷனர் (பொறுப்பு) மணிவண்ணன், தாசில்தார் காந்தி, சித்த மருத்துவர் தவமணி முன்னிலை வகித்தனர்....
Chennai:
Tamil Nadu has decided to go in for teakwood plantation drive in eight districts. The drive would be launched in 6,475 hectares in Cuddalore, Karur, Tiruchi, Thanjavur, Nagapattinam, Tiruvarur, Perambalur and Tirunelveli in the current year and over Rs 6.8 crore has been earmarked for the purpose, an official release said.
...
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட முதல்வரின் பசுமை வீடுகளில் சோலார் விளக்குகள் பொருத்தும் பணி நேற்று முதல் துவங்கியது. தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றும் பொருட்டு கடந்த ஆட்சியில் இலவச வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் 200 சதுர அடியில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது....
விருத்தாசலம்:
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில், விலங்கியல் மன்றம் துவக்க விழா மற்றும் முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. விலங்கியல் மன்ற துவக்க விழாவிற்கு, கல்லூரி முதல்வர் டாக்டர் கோவிந்தன் தலைமை தாங்கினார். விலங்கியல்துறைத் தலைவர் முனைவர் சாந்திஜெயரதி முன்னிலை வகித்தார். வேதியியல் துறை உதவி பேராசிரியர் சுந்தரசெல்வன் வரவேற்றார்.
...
கடலூர்:
நீலம் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (30/10/2012) வீசிய சூறைக் காற்றில் 500 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
கனமழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கடலூர் அருகே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நீலம் புயல் காரணமாக மாவட்டத்தில் கடந்த 28ம்...
கடலூர்:
இலவச ஆம்புலன்ஸ் பிரிவில் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கான நேர்காணல் முகாம் வரும் 19ம் தேதி கடலூரில் நடக்கிறது.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் இயங்கி வரும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை பிரிவில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்காணல் வரும் 19ம் தேதி...
கடலூர்:
நெய்வேலியில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாமில் பங்கேற்கவுள்ள மாவட்ட இளைஞர்களுக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்திய ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் நவம்பர் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நெய்வேலி, பாரதி விளையாட்டரங்கில்...
கடலூர்:
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு இந்தியா முழுவதும் ஊராட்சிகளில் இலவச சட்ட ஆலோசனை மையங்கள் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சிகளில் இலவச சட்ட ஆலோசனை மையங்கள் திறக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இம்மையங்கள் விரைவில் துவங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. இம்மையத்தில் பட்டதாரிகள், ஆசிரியர்கள்,...
கடலூர்:
கடலூர் கே.என்.சி. மகளிர் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில், பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கே.என்.சி. மகளிர் கல்லூரியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் பயில்கின்றனர். அரசு உதவிப் பெறும் இக்கல்லுரியில் போதிய அடிப்படை...
கடலூர்:
கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கலை மற்றும் மேலாண்மையில் கல்லூரியில் கணிதத் துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான கருத்தரங்கம் அண்மையில் நடந்தது. கல்லூரி தாளாளர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி கணிதத் துறை தலைவர் எம்.ரேணுகா வரவேற்றார். முதல்வர் டாக்டர் எஸ்.ரமாராணி தொடக்க உரையாற்றினார். அண்ணா பல்கலைக்கழகத் திருச்சி மண்டல பேராசிரியர் விஜயபாலாஜி கணிதத்தின் பயன்பாடு குறித்து பேசினார். ...
கடலூர்:
மண்டல அளவிலான கபடி போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர். நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மண்டல தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி, நாகப்பட்டினம் ஹாஜி ஷேக் இஸ்மாயில் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் 16 பாலிடெக்னிக் கல்லூரிகள் பங்கேற்றன. போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லூரி முதல் இடத்தை பெற்றது. வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை...
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மின்னணு தபால் மற்றும் கோப்பு விவரங்கள் பதிவு முறை துவங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மின்னணு மேலாண்மை திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை அரசு துறைகளில் ஏற்படுத்தி வருகிறது. வெளிப்படையான துரிதமான முறைகளில் அரசின் சேவைகள் பொது மக்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கம்ப்யூட்டர் சார்ந்த தொழில் நுட்பத்தினை...
விருத்தாசலம்:
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி என்.எஸ். எஸ்., சார்பில் நடந்த செஞ்சுருள் சங்க துவக்க விழா மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் (பொறுப்பு) சுப்ரமணியன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட செஞ்சுருள் சங்க மேலாளர் கதிரவன் எல்.சி.டி., புரொஜக்டர் மூலம் செஞ்சுருள் சங்க செயல்பாடு மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்து விளக்கமளித்தார். பேராசிரியர்கள்...
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தந்தைப் பெரியாரின் 134-வது பிறந்த தினத்தில் ( 17/09/2012) கல்லூரியில் அமைந்துள்ள தந்தைப் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
...
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினம் நாளை கடைபிடிக்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று முதல் வரும் 19ம் தேதிவரை சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதனையொட்டி கடலூர் சில்வர் பீச்சை...
கடலூர்:
கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் இரண்டு நாள் இலவச இருதய பரிசோதனை முகாம் இன்று துவங்குகிறது.
கல்லூரி முதல்வர் மல்லிகாசந்திரன் கூறுகையில்,
கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவிகள் கிராமங்களில் முகாமிட்டு சமூக சேவையாற்றி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து...
கடலூர், :
கடலூரில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் மாணவியர் 100 பேர் ரத்ததானம் செய்தனர்.
கடலூர் புனித வளனார் அறிவியல் மற்றும் கலை கல்லூரி மற்றும் அன்னை தெரசா நிறுவனம் ஆகியன இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது. கல்லூரி செயலர் முனை வர் ரட்சகர் அடிகளார் முகாமினை தொடக்கி வைத்தார். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் மாணவிகள் 100 பேர் ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில்...
கிள்ளை:
சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நேற்று துவங்கியது.கல்லூரி முதல்வர் வாசுதேவன் தலைமை தாங்கினார். வேதியியல் துறைத் தலைவர் வணங்காமுடி வரவேற்றார். நேற்று நடந்த முதல்நாள் கருத்தரங்கை மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சபாபதிமோகன் துவக்கி வைத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் சுவாமிநாதன்...
கடலூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கடலூர் மண்டலத்தில் 26 புதிய பஸ்களில் 14 புதிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1000 புதிய பஸ்கள், 379 வழித்தடங்களில் விடப்பட்டது. இதனை சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் இயக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கடலூர் பணிமனையில் 26 புதிய பஸ்கள் நேற்று இயக்கப்பட்டது.
...
பண்ருட்டி:
பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் அறிமுகக் கூட்டம் நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி புலமுதல்வர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கட்டடவியல் பேராசிரியர் சுரேஷ்குமார்முன்னிலை வகித்தார். டாக்டர் சீனுவாசன் வரவேற்றார். இதில் கட்டடவியல், இயந்திரவியல், கணிபொறி, மின்னியல், மின் அணுவியல் துறை முதலாமாண்டு 360 மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
விழாவில் சென்னை...
கிள்ளை:
கிள்ளை அருகே ராகவேந்திரா கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் பி.எட்., வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லூரி தாளாளர் மணிமேகலை கோவிந்தராஜன் தலைமையேற்றுகுத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஆலோசகர் இளங்கோ முன்னிலை வகித்தார். செயலர் பாபு வரவேற்றார். ரங்காச்சாரி பேசினார். டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு படங்களாக மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.விழாவில் ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயபால், துணை...
கடலூர்:
கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் கிரவுன் சர்க்கஸ் துவக்க விழா நேற்று நடந்தது. நகராட்சி சேர்மன் சுப்ரமணியன் திறந்து வைத்தார். விழாவில் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சர்க்கசில் ஆப்பிரிக்கா, மணிப்பூர்,மங்கோலியா கலைஞர்களின் ஜிம்னாஸ்டிக், ரிங் டான்ஸ், இரும்பு கூண்டுக்குள் இருசக்கர வாகனம் ஓட்டுவது, ஸ்கை வாக், பயர் டான்ஸ், ஆப்பிரிக்கா காட்டு நடனம், பார் விளையாட்டு, கூர்மையான...
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆண்டு தோறும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர்) வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம். தமிழக அரசு சார்பில் 2011-2012ம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதுக்கு கடலூர் மாவட்டத்திலிருந்து தொடக்கக் கல்வித்துறையில் 13 பேரும், உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியில் 15 பேரும் பரிந்துரை செய்யப்பட்டனர்.
அவர்களில்...
கடலூர் :
திருவள்ளுவர் பல்கலைக்கழக ஹாக்கி அணிக்கான தேர்வுப் போட்டி நேற்று கடலூரில் நடந்தது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான அகில இந்திய ஹாக்கி போட்டி வரும் நவம்பர் மாதம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் நடத்துகிறது. இப்போட்டியில் பங்கேற்க திருவள்ளுவர் பல்கலைக்கழக அணிக்கான தேர்வுப் போட்டி நேற்று கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.
...
சி.முட்லூர் :
சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் கோரி நேற்று வகுப்பு புறக்கணிப்பு செய்தனர். சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரிக்கு போதிய ஆசிரியர்கள், குடிநீர், சாலை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கல்லூரி மாணவர்கள் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதனை கல்லூரி நிர்வாகம்...
கடலூர் :
ஒடிசாவில் நடைபெறவுள்ள தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு கடலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசார் தேர்வு பெற்றுள்ளனர்.
சென்னையில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. அதில் கடலூர் மாவட்ட ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீசார்கள் மணிகண்ட பிரபு, சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர்.அவர்களில் மணிகண்ட பிரபு 100 அடி பிரிவில் தங்கப்பதக்கமும்,...
விருத்தாசலம் :
விருத்தாசலம் அரசு கல்லூரியில் நேர்முக பொது வாய்மொழித் தேர்வு நடந்தது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முனைவர் பட்டத்துக்குரிய நேர்முக பொது வாய்மொழித் தேர்வு, தமிழ் முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை வளாகத்தில் நடந்தது. சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் செல்வகுமாரன் தேர்வாளராகவும், திருவெண்ணெய்நல்லூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை மற்றும்...
குறிஞ்சிப்பாடி :
குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்களுக்கு இலவச பாடநூல் வழங்கும் விழா நடந்தது.
நிர்வாக அதிகாரி முத்துகுமரன் தலைமை தாங்கினார். வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகத்துறை தலைவர் சிவசங்கரன் வரவேற்றார். நிர்வாக குழுத் தலைவர் சட்டநாதன், முதல்வர் முத்துகருப்பன், தேசிய தரநிர்ணயக்குழு ஒருங்கினைப்பாளர் தண்டபாணி முன்னிலை வகித்தனர். ஜோதிமணி பழனி, பேராசிரியர் கலியமூர்த்தி எழுதிய வணிக பொருளியல்...
கடலூர்:
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே பள்ளிக்குச் செல்ல தயாராக நின்றுக்கொண்டிருந்த எல்.கே.ஜி. மாணவி கார் மோதி உயிரிழந்த சம்பவம், பெற்றோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில் (விவசாயி). இவரது மகள் செவ்விழி (வயது 4). பரங்கிப்பேட்டை அருகே மடவாபள்ளத்தில் உள்ள தனியார்...
சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பு அடுத்த கானூரில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது.அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர்சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் தில்லைராஜன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாலசுந்தரம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கருப்பன், ஒன்றிய சேர்மன் ஜெயபாலன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் குணசீலன் வரவேற்றார்.காட்டுமன்னார்கோவில்...
கடலூர்:
அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற கடலூர் தூய வளனார் கல்லூரி கால்பந்தாட்ட மாணவிகள் மற்றும் கபாடி வீரருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை பெற்றனர். கடலூர் நகரில் தூய வளனார் அறிவியல் மற்றும் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் கால்பந்தாட்ட மாணவிகள், கபாடி வீரர்கள் இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.
சென்னை ஜவகர்லால்...
கடலூர்:
தேசிய புத்தாக்கத் திறன் நிறுவனம் நடத்தும் தொழில் நுட்ப யோசனைகளுக்கான போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை வரும் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சியுடன் செயல்படும் அகமதாபாத் தேசிய புத்தாக்கத் திறன் நிறுவனம், பள்ளி மாணவர்களின் சுயமான தொழில் நுட்ப யோசனைகளுக்கான போட்டியை நடத்துகிறது.
இப்போட்டியில்...
கடலூர்:
வண்டிப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் அலைபேசிகளை பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மின் விளக்குகளை உடைத்து சேதப்படுத்தினர். கடலூர், வண்டிப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 595 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு அலைபேசி கொண்டு வருவதை தடுக்கவும்,மாணவர்களின் நடவடிக்கையை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைமையாசிரியர் தலைமையில் 10 பேர் கொண்ட ஓழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது....
கடலூர்:
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 எழுத்துத் தேர்வு வினாத்தாள் கடலூரில் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 எழுத்து தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. தமிழகத்தில் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதினர்.
...
சிறுபாக்கம்:
பழமை வாய்ந்த கோவில்களில் சுடுமண் சிற்பங்கள் பராமரிப்பின்றி அழிந்துவரும் அவலம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின் பிரதான கோவில்களில் பண்டை காலத்தில் கிராமத்தினையொட்டி ஆண்டவர், ஐயனார், எல்லையம்மன், கருப்பையா, மதுரைவீரன் உள்ளிட்ட பழமை வாய்ந்த கோவில்கள் இயற்கை சூழலுடன் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு கிராம மக்கள் தை முதல் சித்திரை மாதம்...
நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிட்டர் பணியிடம் காலியாக உள்ளதால் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க ஆள் இல்லாமல் நோய் பரவும் அபாயம் உள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணியாற்றிய பிட்டர் இளங்கோ இரண்டு மாதத்துக்கு முன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக வேறு யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.நகரம் முழுவதும் உள்ள குடிநீர் பகிர்மான குழாய்களை பராமரிக்க தனியாருக்கு டெண்டர் விட்டனர். நடப்பு ஆண்டு அந்த டெண்டரும் விட வில்லை....
திட்டக்குடி:
தொழுதூர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆர்வத்திறன் மற்றும் ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பழனிச்சாமி வரவேற்றார். முகாமில் லேம்ப்ஸ் இன்ஸ்டியூட் ஆப் லாங்வேஜ் லேர்னிங் நிறுவனத்தின் பயிற்சியாளர்கள் மாணிக்கம், டேவிட் ஜெயக்குமார், சண்முகம் மற்றும் ...
கடலூர், :
பிளாஸ்டிக் கொடிகளுக்கு பதிலாக துணிக்கொடிகளை பயன் படுத்துமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல்...
சிதம்பரம் :
அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. அண்ணாமலை பல்கலைக் கழக மின்னியல் துறையில் 2003-2007ம் ஆண்டு பயின்ற மாணவர்களின் சந்திப்பு கூட்டம்சிதம்பரத்தில் கடந்த 5ம் தேதிநடந்தது. இதில் வெளிமாநில மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கடவுள் வாழ்த்துடன் துவங்கிய விழாவில் மாணவர்கள் தங்கள் கல்லூரி நினைவுகளை...
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல் நிலைத் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வரும் 2013ம் ஆண்டு அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல் நிலை தேர்வு பயிற்சி மாணவர்களை தேர்வு செய்வதற்காக வரும் அக்டோபர் 7ம் தேதி நுழைவுத் தேர்வு நடக்கிறது. அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி...
STATE BANK OF INDIA - Requirement (2012)
Recruitment to Clerical Cadre in Associate Banks of SBI
Advt No. CRPD/ABCL/2012-13/01 dated 25-07-2012
(Written Examination on 07.10.2012 and 14.10.2012)
◦On-line Registration of Application : 30.07.2012 to 13.08.2012
◦Payment of Fees – Offline (at SBI Branches) : 01.08.2012 to 17.08.2012
◦Payment of Fees – Online : 30.07.2012 to 13.08.2012
NOTIFICATION
http://www.statebankofindia.com/webfiles/uploads/files/1343129241717_SBI_ABCL_ADVT_ENGLISH.pdf
APPLY...
சிதம்பரம்:
சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனின் ஓராண்டுப் பணிகள் குறித்த நூல் வெளியீட்டு விழா வடக்குமெயின்ரோடு பைசல் மஹாலில் ஆகஸ்ட் 8-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் மூசா தலைமை வகிக்கிறார். நகரச் செயலர் ஆர்.ராமச்சந்திரன் வரவேற்கிறார். மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் பி.ஜான்சிராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சி.வெங்கசடேசன்,...
Dell has committed another $2.4 million as a part of its Corporate Social Responsibility (CSR) programme. Over the last few years, Dell has funded $6.5 million in CSR related activities. As a part of this initiative, Dell Learning in India which is funded by Dell works with more than 13 NGOs to equip them with digital learning resources such as desktops or laptops through Dell...
கடலூர் : கடலூர் அரசு பள்ளிகளில் செல்போன் வைத்திருக்கிறார்களா? என்று மாணவிகளிடம் ஆசிரியர்கள் திடீரென சோதனை நடத்தினர்.
தமிழகம் முழுவதும் பள்ளியில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகளிடம் திடீரென சோதனை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று கடலூரில் உள்ள...
கடலூர் :
ஆடிப்பெருக்கையொட்டி இன்று கடலூர் தலைமை தபால் நிலையத்தில் 6.5 சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் தங்க நாணயம் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து கடலூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தபால் துறை இணைந்து தங்கக் காசுகள் விற்பனையை தபால் அலுவலகங்கள் மூலம், திருச்சி மண்டல தபால் நிலையங்களில் நடத்தி வருகிறது. இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு, 6.5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியுடன்...
சிதம்பரம் :
சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதி செம்மொழி மன்ற துவக்க விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.அறக்கட்டளை தலைவர் மணிமேகலை, நிர்வாக செயலர் பாபு, ஆங்கிலப்புல முனைவர் அப்துல் ரஹீம், துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அண்ணா துரை வரவேற்றார். இணை பேராசிரியர் இந்திராகாந்தி தொகுத்து...
சிதம்பரம் :
கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லூரியின் நிறுவன தர உறுதி செய் மன்றக் கூட்டம் கல்லூரியின் நூலக அரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஆலோசகர் கனகசபை முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நர்மதை வரவேற்றார். கல்லூரி நிறுவனத் தலைவர் மணிமேகலை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். செயலர் பாபு வாழ்த்திப் பேசினார். கற்றல் கோட்பாடுகள், கற்பித்தல் நெறிமுறைகள் பற்றி துறைத் தலைவர்கள் ...
சிறுபாக்கம்:
மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியங்களுக்கு நடப்பு ஆண்டில் 341 பசுமைவீடுகள் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது
.மங்களூர் ஒன்றியத்தில் 66 ஊராட்சிகளில் 23 ஊராட்சிகளுக்கு நடப்பாண்டில் முதல்வரின் பசுமை வீடுகள் 163 வீடுகள் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழ்ஒரத்தூர் 5, அடரி 5, மாங்குளம் 10, சிறுபாக்கம் 10, வடபாதி 15, ஒரங்கூர் 10,...