கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் ஜன. 10ம் தேதி 2.48 லட்சம் குழந்தைகளுக்கு போலி யோ சொட்டு மருந்து போடப்படும் என சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா கூறினார். இது குறித்து சுகாதார துறை துணை இயக்குனர் மீரா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 10 மற்றும் பிப்ரவரி 7 ஆகிய தேதிகளில் இரு தவணையாக போலி யோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து 0-5 வயதுள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 1998 பிறகு போலியோ பாதிப்பு எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படவில்லை என ஆய் வறிக்கை உறுதிபடுத்தி உள்ளது. இருப்பினும் காற் றின் மூலம் பவும் போலி யோ வைரஸ் தாக்கம் இனியும் தமிழகத்தில் அறவே கூடாது என்ற நோக்கத்தில் மத்திய மாநில அரசின் உத்தரவுபடி ஆண்டுதோறும் இரண்டு தவணையாக போலியோ செட்டு மருந்து போடப்படுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகூடம், சத்துணவு மையம் போன்ற இடங்களில் முகாம் தேர்வு செய்யப் பட்டுள்ளன. தேர்வு செய் யப்பட்டுள்ள 1512 மையங் கள் மற்றும் சிறப்பு மையங்கள், மாவட்ட எல்லையோர குடிசை பகுதி, புதியதாக உருவான காலனிகள் ஆகிய இடங்களில்101 சிறப்பு மையங்கள் அமைக்கபட்டுள்ளன. ஒவ்வெரு தவணையிலும் 2 லட்சத்து 28 ஆயிரத்து105 குழந்தைகளுக்கு போலி யோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற் காக இயக்குனகரத்திலிருந்து 3 லட்சத்து 67 ஆயிரத்து 200 டோஸ் போலியோ மருந்து தருவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மையத்திலும் 4 பணியாளர்கள் பணியில் இருப்பர். இவர்கள் தவிர தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், என்.சி.சி., மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர் கள், சுயஉதவிக்குழுக்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட உள்ளனர். குழந்தைகளுக்கு போடப் படவுள்ள சொட்டு மருந்து குறித்தோ, பின் விளைவுகள் குறித்தோ பொது மக்கள் எவரும் ஐயப்படத்தேவையில்லை. தேவையற்ற வதந்திகளை நம்பவேண் டாம். இவ்வாறு சுகாதாரத் துறை துணை இயக்குனர் மீரா கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக