கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள 483 ஊராட்சிகளுக்கு திட்டங்களுக்காக ரூ. 10.23 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி நிதிக் கணக்கில் உள்ள உபரிநிதியை திட்டப்பணிகளுக்கு செலவிட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.÷483 ஊராட்சிகளில் கணக்கு எண். 2-ல் உள்ள (மின்சாரக் கட்டணம், கூட்டுக் குடிநீர், மற்றும் ஆட்சியர் பெயரில் மட்டுமே காசோலை வழங்கக் கூடியவை) உபரித் தொகை ரூ. 10 கோடியே 23 லட்சத்து 88 ஆயிரத்து ஐம்பத்தி ஒன்றை அவ்வூராட்சிகளின் கணக்கு எண். 3-க்கு (திட்டப் பணிகளுக்காக காசோலை வழங்கக் கூடியை) மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இத்தொகையைக் கொண்டு பள்ளிகளில் 50 சமையல் கூடங்கள், 236 தெருவிளக்குகள் அமைத்தல், 193 பள்ளிகளுக்கு மதில் சுவர் கட்டுதல், 12 மயானக் கொட்டகை கட்டுதல், 41 அங்கன்வாடிக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பணிகளை ஊராட்சிகள் மூலம் அரசு விதிகளின்படி ஒப்பந்தப் புள்ளி கோரி மேற் கொள்ள வேண்டும். அங்கன்வாடிக் கட்டடம் மற்றும் பள்ளி சமையல் அறைகள் அங்கீகரிக்கப்பட்ட மாதிரியில் கட்டப்பட வேண்டும். மயானக் கொட்டகை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட மாதிரியில் கட்ட வேண்டும். அனைத்து பணிகளுக்கும் தொழில்நுட்ப அலுவலரின் அளவுகள் பதியப்பட வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக