கடலூர் :
வேலை நிறுத்த போராட்டத்தை சட்ட பூர்வமாக்கவேண்டுவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலை நிறுத்த போராட்டத்தை சட்ட பூர்வமாக்க வேண்டும், பொது வைப்பு நிதி, ஊழியர்கள் வைப்பு நிதி, சிறு சேமிப்பு வட்டியை உயர்த்தவேண்டும், ஓய்வு பெற்ற அலுவலர்கள் பணியில் அமர்த்தும் போக்கை கைவிடவேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். எழிலன், ஆதவன், ராமநாதன், அய்யாசாமி முன்னிலை வகித்தனர், ஞானகண்ணன் செல்லப்பா, ராஜஜேந்திரன், அருள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாநில துணைத் தலைவர் புருஷோத்தமன் சிறப்புரையாற்றினார். குமார் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக