விருத்தாசலம் :
நெல்மணிகள் அரவையில் 62 சதவீதம் முழு அரிசி கிடைத்திட அறுவடைக்கு பின் நேர்த்தி முறைகளை கையாள வேண்டும் என வேளாண்மை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேளாண்மை துணை இயக்குனர் தனவேல், விருத்தாசலம் கோட்ட வேளாண் அலுவலர் அமுதா கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தாலுகாவில் தற்போது சம்பா நெல் அறுவடை நடந்து வருகிறது. நெல்லில் கூடுதல் விலை பெறுவது அதிலுள்ள முழு அரிசியின் அடிப்படையில் தான் உள்ளது. நெல்மணிகள் அரவையில் 62 சதம் முழு அரிசி கிடைத்திட கீழ் கண்ட நேர்த்தி தொழில் நுட்பங் களை கையாளவேண்டும்.
நெல் ரகங்களின் வயதிற்கேற்றவாறு பயிரின் அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும். நெற்கதிரின் மணிகள் 80 சதவீதம் மஞ்சள் நிறமாக மாறி இருந்தாலே அறுவடையை மேற்கொள்ளலாம். இதனால் மணிகள் உதிர்ந்து சேதாரமாவதை தடுக்கலாம். அறுவடையின்போது ஈரப்பதம் 19 முதல் 23 சதவீதம் இருக்கவேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். நெல் மணிகள் அதிக ஈரப்பதம் இல்லாமல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக