உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 08, 2010

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.86 லட்சம் மோசடி: 4 பேர் கைது

கடலூர் :

              தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் தயாரித்து 86 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கடலூரை அடுத்த வெள்ளக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், 1999ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் இருப்பதாகவும், ஏற்கனவே ஒருவருக்கு கடன் வழங்கப்பட்ட நிலத்தில் வேறு ஒருவர் பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கடன் பெற்றது, போலி நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றது என, 86 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

               இதனடிப்படையில் வங்கியில் பணிபுரிந்த 17 பேர் கடந்த ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து வெள்ளக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் துணை பதிவாளர் சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில், கடலூர் வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., ரீட்டா தலைமையிலான போலீசார், 85 உறுப்பினர்கள், 17 வங்கி பணியாளர்கள், எட்டு வி.ஏ.ஓ.,க்கள் உட்பட 110 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

                  இந்நிலையில் 10 பேர் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ஆறு லட்சம் மோசடி செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உறுப்பினர் கோண்டூர் சிவமுத்து(38), நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் இருப்பதாகக் கூறி ஆவணங்கள் தயாரித்து 8.36 லட்சம் ரூபாய் மோசடி செய்த முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் வி.காட்டுப்பாளையம் கிருஷ்ணமூர்த்தி(58) மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கியின் காசாளர் கீழ்மாம்பட்டு லோகநாதன்(39) உர விற்பனையாளர் ராமாபுரம் வேல்முருகன்(35) ஆகியோரை போலீசார் கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்-1ல் ஆஜர்படுத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior