கடலூர் :
மீனவர்களுக்கு எதிரான மசோதவை எதிர்த்து பிப்ரவரி 2ம் தேதி கவர்னர் மாளிகை முன் முற் றுகை போராட்டம் நடத் தப்படும் என எம்.பி., ரங்கராஜன் பேசினார். கடலூரில் நடந்த சி.ஐ.டி.யூ., தமிழ் மாநில மாநாடு பொதுக் கூட்டத் தில் மாநில துணைத் தலைவரான எம்.பி., ரங்கராஜன் பேசியதாவது: விலைவாசி கடுமை யாக உயர்ந்துள்ள இந்த வேலையில் அரசு இலவசமாக வழங்கும் வெல் லம், முந்திரி, பச்சரி, ஏலக்காய் ஏதும் இந் தாண்டு இல்லை.
தி.மு. க., ஆட்சியில் கொடுப்பதாக இருந்தால் முதல்வர் அறிவிப்பார். எடுப்பதாக இருந்தால் அதிகாரிகள் அறிவிப்பார்கள். இந்திய மீனவர்களின் வாழ்கையை நசுக்கும் மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது. இதனை தி.மு.க., அமைச்சர்களின் ஒப்புதலுடன் தான் கொண்டு வரப் பட்டுள்ளது. ஆனால் தேர் தல் என்பதால் கருணாநிதி இதை தற்போது வேண்டாம் என தள்ளி வைத்துள்ளது தான் உண்மை. மீன்பிடி முதலாளிகளுக்கு ஆதரவாகவே இந்த மசோதாவை மத் திய அரசு கொண்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 2,515 கோடி மீன்பிடி முதலாளிகள் சம்பாதித்துள்ளனர்.
இந்த நிதியாண்டில் 20 ஆயிரம் கோடிக்கு ஏற் றுமதி செய்வோம் என கூறுகின்றனர். மீனவர் களை 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சென்று மீன் பிடித்தால் அபராதம், சிறை தண் டனை, மீன்கள் பறிமுதல் என நடவடிக்கை எடுக்க வழி செய் துள்ள மசோதாவில், வெளிநாட்டு பண முதலாளிகளின் கப்பல் எல்லையை தாண்டிவந் தால் வழி தவறி வந்துவிட்டதாக கருதி அவர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்து அனுப்பி விடுவார்களாம். மீனவர்களின் வாழ்கையை நசுக்கும் இந்த மசோதாவை கண் டித்து வரும் பிப்ரவரி 2ம் தேதி கவர்னர் மாளிகை முற் றுகை போராட்டத்தில் சி.ஐ.டி.யூ., தொழிலாளர்கள் பெருமாளவில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு ரங்கராஜன் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக