உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 08, 2010

கடலூரில் இயலா குழந்தைகளை பயன்படுத்தி போராட்டம்: பொது மக்கள் முகம்சுளிப்பு

கடலூர் :

             மனவளர்ச்சி குன்றிய, இயலா குழந்தைகளை பயன்படுத்தி பள்ளி நிர்வாகிகள் நடத்திய போராட் டத்தைக் கண்டு பொது மக்கள் முகம்சுளித்தனர். மனவளர்ச்சி குன்றிய, இயலா குழந்தைகளின் தொண்டு நிறுவன சிறப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு அரசு காலமுறை ஊதியம் வழங்க வேண் டும், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி நிர்வாகிகள் இயலா குழந்தைகளை பயன்படுத்தி கடலூரில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டனர்.

                      இந்த ஊர்வலத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் காலை 8 மணி முதல் பெரியார் சிலையருகே காத்துக் கிடந்தனர். காலை 11 மணிக்குதான் ஊர்வலம் துவங்கியது. உலகமே அறியாத சின்னஞ்சிறுசுகள், மனம் வளர்ச்சி குன்றிய குழந்தைகள், கை, கால் ஊனமுற்ற குழந்தைகள் உட்பட 250 மாணவ, மாணவிகள் 3 மணி நேரம் காத்துக்கிடந்ததோடு அல் லாமல் நெடுநேரம் சாலைகளில் பாதகைகளை ஏந்தி ஊர்வலம் வந்தனர். பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களின் கோரிக்கையை வென்றெடுக்க இந்த இயலா குழந்தைகளையா பயன்படுத்த வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள எத்தனையோ அகிம்சை வழியிலான போராட்டங்கள் உள்ளன. இதை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் மட்டுமே நடத்தி காட்டலாம். இயலா குழந்தைகளை மனவேதனையுடன் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் ஆசிரியர்களுக்காக போராடவா?  இயலா குழந்தைகளை பயன்படுத்தி பள்ளி நிர்வாகிகள் நடத்திய ஊர்வலத்தை  கண்ட பொது மக்கள் முகம் சுளித்தவாறே சென்றனர். கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர் இதை எப்படி அனுமதித்தார் என்பது வியப்பாக உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior