பண்ருட்டி :
மூன்றாண்டுகளாக மக்கள் குறை கேட்க வராத ஊராட்சித் தலைவரை அறையில் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட் டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு ஊராட்சியில், மன்ற உறுப்பினர்களின் கூட்டம், நேற்று காலை நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரத்தாழ்வார் தலைமை தாங்கினார். ஊராட்சி உதவியாளர் மற்றும் மக்கள் நலப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் துவங்கியதும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, "வார்டு பகுதிகளில் சுகாதார வசதி செய்து தரவில்லை; தெருவிளக்கு வசதி இல்லை; கடந்த மூன்றாண்டுகளாக ஊராட்சி கூட்டம் நடத்தாமல், ஊராட்சி தலைவர் வீட்டில் கூட்டம் நடக்கிறது, கிராம சபை கூட்டம் நடக்கவில்லை' என அடுக்கடுக்காக பல்வேறு புகார்களை எழுப்பினர். இதற்கு ஊராட்சிமன்றத் தலைவர் பதில் கூறாததால், ஆத்திரம் அடைந்த அப்பகுதிமக் கள், கூட்டம் நடந்து கொண்டிருந்த அறைக்கதவை பகல் 12 மணிக்கு பூட்டினர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிராம பிரமுகர்கள் பேச்சு வார்த்தைக்குப் பின், ஒரு மணிக்கு பூட்டை திறந்து விட்டனர். போலீசார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக