உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 08, 2010

தங்கத்தின் தரம் கண்டறியும் பயிற்சி: கடலூரில் வரும் 23ம் தேதி துவக்கம்

கடலூர் :

                  கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தங்கத்தின் தரம் கண்டறியும் பயிற்சி வகுப்பு வரும் 23ம் தேதி துவங்குகிறது. இது குறித்து கடலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெங்கடேசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கடலூரில் இயங்கி வரும் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 23ம் தேதி முதல் துவங்குகிறது. அதில் நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும், அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கம் பற்றிய அடிப்படை விவரம், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, தங்கத்தை அழித்து தரம் அறியும் முறை, அழிக்காமல் தரம் அறியும் முறை, நகைகளின் வகைகள் கண்டறிதல், வங்கிகளில் நகை கடன் வழங்கும் முறை, ஹால் மார்க், அடகு பிடிப்போர் நடைமுறை சட்டம் உள்ளிட்ட பாடங்கள் குறித்து 40 மணி நேர பயிற்சியும், 30 மணி நேரம் நகை செய்யும் பயிற்சியும், 30 மணி நேரம் உரைக்கல் முறையில் தங்கத்தின் தரம் கண்டறியும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

                பயிற்சியின்போது தேவையான உபகரணங்கள் வழங்கப்படும். பயிற்சி முடிவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்று வழங்கப்படும். வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் என தொடர்ந்து 8 வாரங்கள் நடக்கும் இப்பயிற்சியில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 வயது முடிந்த ஆண், பெண் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவோர் கடலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு புகைப்படத்துடன் நேரில் வந்து 50 ரூபாய் செலுத்தி விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பயிற்சி கட்டணமாக 2,600 ரூபாய் செலுத்த வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior