உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 08, 2010

சீர்காழியில் அரசு பஸ்கள் மோதல்: 3 பேர் பலி; 24 பேர் படுகாயம்

மயிலாடுதுறை :

               சீர்காழி அருகே, நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது, மற்றொரு அரசு பஸ் மோதி, மூன்று பேர் இறந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு, நேற்று அதிகாலை, அரசு பஸ் ஒன்று சென்றது. சீர்காழி அருகேயுள்ள நல்லான்சாவடியில், "டயர் பங்சர்' ஆகி, பஸ்  நின்றது. அப் போது அவ்வழியே, வேலூரிலிருந்து மன்னார் குடி சென்ற அரசு பஸ்,  நின்றிருந்த பஸ்சின் பின்புறம் மோதியது. இவ்விபத்தில், வேலூர் அரசு பஸ் நடத்துனர், சம்பவ இடத்திலேயே இறந்தார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், மேலும் இருவர்  உயிரிழந்தனர். படுகாயமடைந்த 24 பேரை, தீயணைப்புத் துறையினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், மேல் சிகிச்சைக்காக  சிதம் பரத்தில் 15 பேரும்,  தஞ்சை மருத்துவக் கல் லூரி மருத்துவமனைகளில் மூன்று பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

                வேலூர் அரசு பஸ் டிரைவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். மணப்பாறையில் விபத்து: கேரள மாநிலம் கட்டப்பனா மாவட்டம், வலிய தோவாலாவை சேர்ந்தவர் தாமஸ் (எ) தங்கச்சன் (60). ஏலக்காய் வியாபாரி.இவர், மனைவி தங்கம்மாள் (55), மகள் லிசா (40), மருமகன் ரெஜி (45), பேத்தி நயா (3) ஆகியோருடன் வேளாங் கண்ணிக்கு, மாருதி ஆல்டோ  காரில் சென் றார். காரை தாமஸ் ஓட்டிவந்தார். இவர்களுடன் இவர்களது உறவினர்களும், தனித்தனியே இரு கார்களில் வேளாங்கண் ணிக்கு சென்று கொண்டிருந்தனர்.  மணப்பாறை அடுத்த முத்தபுடையான்பட்டி அருகே, நான்கு வழிச் சாலை பணிக்காக ரோடு மாற்றம் செய்யப்பட்ட இடத்தில், நேற்று காலை 11.30 மணிக்கு கார் வந்த போது, ஜெயங்கொண் டத்தில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பஸ்  மீது, நேருக்கு நேர் மோதியது.

                இதில், பஸ்சின் முன் பகுதியில், கார் பாதியளவு நுழைந்தது. காரை ஓட்டிவந்த தாமஸ், முன் சீட்டில் உட்கார்ந்து வந்த தங்கம் மாள் ஆகிய இருவரும்,  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லிசா, ரெஜி, நயா ஆகிய மூவரும் படுகாயமடைந்து, மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில், முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக, திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ரோடு, "டைவர்ட்' செய்யப்பட்டுள்ளது தெரியாமல், காரை ஓட்டியதால்தான் விபத்து நடந்துள்ளது. போதிய அறிவிப்பு பலகை மற்றும் சிக்னல்கள் இல்லாததே, விபத்துக்கு காரணம். போலீசார் மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior