விருத்தாசலம் :
விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் கோரி வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்கள் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து தரக் கோரியும், கடந்த 10 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் மாணவியர் விடுதியை திறக்கக் கோரியும் நேற்று காலை வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் கல்லூரி சாலை வழியாக மணல் அள்ள மாட்டு வண்டிகள் தினந்தோரும் செல்வதால் மாணவ- மாணவிகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறி கல் லூரி சாலையில் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டிகளை சிறை பிடித்தனர். மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய இன்ஸ்பெக்டர் பசுபதி கல்லூரி சாலை வழியே மாட்டு வண்டிகள் செல்லாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின் மாணவர்கள் கலைந்து சென்றனர். கல்லூரி மாணவர்கள் தமிழரசன், சுதாகர், ரவி ஆகியோர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரை சந்தித்து மனு கொடுத்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக