பண்ருட்டி :
பண்ருட்டி ஹஜரத் நூர் முகமது அவுலியா தர்கா கந்தூரி உரூஸ் பண்டிகை இன்று (11ம் தேதி) துவங்கி வரும் 16ம்தேதி வரை விமரிசையாக நடக்கிறது.
பண்ருட்டி ஹஜரத் நூர் முகமது அவுலியா தர்கா கந்தூரி உரூஸ் பண்டிகை நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு இன்று பான் வாஜமா பக்கீர் மற்றும் ரிபாய் ஐமாக்கள் தர்காவிற்கு வருகை புரிதல் நிகழ்ச்சியும், நாளை (12ம்தேதி) மாலை விமரிசையாக பேண்டு வாத்தியம் மற்றும் வேடிக்கைகளுடன் கொடி ஊர்வலம் வந்து பின் கொடியேற்றம் நடக்கிறது. மறுநாள் (13ம் தேதி) மாலை மவுலூத் ஷரிப் ஒதி சீரணி வழங்குதல் நிகழ்ச்சியும், 14ம்தேதி மாலை அவுலியா அவர்களின் ரவுலா ஷரீப் பீடத்தை பூக்களால் அலங் கரித்து இரவு 12 மணிக்கு மேல் சந்தனக்கூடு விழா நடக்கிறது. 15ம் தேதி திருவிளக்கு விழாவும், 16ம் தேதி குர்ஆன் ஷரிப் ஹத் தம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் தாஜீதீன் மற்றும் உறுப்பினர்கள், ஐமாத்தார்கள் செய்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக