கடலூர் :
மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகில் நடந்த விழாவில் டிஎஸ்.பி., ஸ்டாலின், முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி ஆகியோர் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
பண்ருட்டி:
ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு போக்குவரத்து காவல் துறை இன்ஸ்பெக்டர் தணிகாசலம் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் வீரதாஸ் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
சிதம்பரம்:
ராமசாமி செட்டியார் பள்ளியில் தமிழ்நாடு நுகர்வோர் குழுமம் சார்பில் நடந்த விழாவிற்கு இணை செயலாளர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். செயலாளர் அப்பாவு வரவேற்றார். டி.எஸ்.பி., மூவேந்தன், மோட் டார் வாகன ஆய்வாளர் காமராஜ், ரங்கநாதன், பேசினர். தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, சிவராமசேது, கொளஞ்சிமணி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
மங்கலம்பேட்டை:
அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு இன்ஸ்பெக்டர் திருமால் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் மாயவேல் முன்னிலை வகித்தார். அரிமா சங்க தலைவர் சிவா, பேரூராட்சி தலைவர் கோபுபிள்ளை மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள், ஆசிரியர் கள், மாணவர்கள் கலந்து கொண் டனர்.
கம்மாபுரம்:
தர்மநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு டி.எஸ்.பி., ராஜசேகரன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் குருசாமி முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விளக்கப்பட்டது. பின்னர் சாலையில் சென்ற வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பூதாமூர்:
நகராட்சி நடுநிலை பள்ளியில் இளங்கோ இலக்கிய மன்றம் சார்பில் சாலை பாதுகாப்பு நிறைவு விழா நடந்தது. உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பஞ்சநாதன் தலைமை தாங்கினார். போக்குவரத்து இன்ஸ் பெக்டர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வெங்கடாஜலபதி, இலக்கிய மன்ற மாணவ செயலாளர் காளியம்மாள், ஆசிரியர் பழனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக