கடலூர் :
விபத்தில் இருவர் இறந்தால், டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய கலெக்டர் பரிந்துரைத் துள்ளதாக டி.எஸ்.பி., பேசினார்.
க டலூரில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. கடலூர் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். துணை மேலாளர் (தொழில்நுட்பம்) ராஜபாண்டியன் வரவேற்றார். துணை மேலாளர்கள் இயக்கம் அன்பழகன், வணிகம் உதயக்குமார், கிளை மேலாளர்கள் குணசேகரன், கோவிந் தசாமி வாழ்த்துரை வழங்கினர். விழாவையெட்டி நடத்திய கட் டுரை மற்றும் வினாடி வினா போட் டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கடலார் டி.எஸ்.பி., ஸ்டாலின் பேசியதாவது:சாலை பாதுகாப்பு வாரவிழா நம் அனைவருக்காகவும் கொண்டாடப்படுகிறது. அரசு பணியில் உள்ளவர்களில் போலீஸ், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் ஆகி யோர் மக்கள் சேவையே மகேசன் சேவை என பணியாற்ற வேண்டும். டிரைவர்களுக்கு பணியின் போது கவனம் முக்கியம். மனிதனை வழி நடத்திச் செல்வது மனம் . அந்த மனதை சிதற விடாமல் பணியாற்ற வேண்டும்.
தமிழகத்தில் தினமும் சராசரியாக 30 பேர் விபத்தில் இறக்கின்றனர். இதில் அதிகளவு கனரக வாகனங்களால் நடக்கிறது. எனவே பணியின் போது பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். விபத்து ஏற்பட்டு இருவர் இறந்தால் டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய கலெக்டர் பரிந்துரைத்துள்ளார். அரசு பஸ் டிரைவர்களுக்கும் இந்த முறையை கொண்டு வர பரிசீலனையில் உள்ளது. எனவே ஒவ்வொரு டிரைவரும் காலை எழுந்ததும் இன்று விபத்தில்லாமல் பணி செய்ய வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக