கடலூர் :
மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்த மழையால் இன்னும் 4 முதல் 5 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெல் அறுவடைக்கு மெஷினை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விவசாயத் திற்கு ஆள் பற்றாக்குறையால் அறுவடைக்கு ஆட் கள் கிடைப்பார்களா என விவசாயிகள் தவிப்பில் உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக் கர் சம்பா நெல் பயிரிடப்பட்டது. ஜனவரி முதல் தேதியிலிருந்து அறுவடை துவங்கியது. கடந்த 10 நாட்களில் அண்ணாகிராமம், கம்மாபுரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் வடவாறு பாசன வாய்க்கால் உள் ளிட்ட மாவட்டத்தின் பல் வேறு பகுதி விவசாயிகள் 25 ஆயிரம் ஏக்கர் வரை நெல் அறுவடை செய்துள் ளனர்.
கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக நெல் அறுவடை செய்த மற்றும் அறுவடைக்கு தயாராக உள்ள விவசாயிகளும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அறுவடை செய்த நெல்லை வியாபாரிகளிடம் விற்பனை செய்ய முடியாத நிலையிலும் பாதி அறுவடை செய்தும் பாதி அறுவடை செய்யாமலும் உள்ள நிலையில் அறுவடை பணிகளும் பாதிக் கப்பட்டுள்ளது.
விருத்தாசலம், பெண்ணாடம், குள்ளஞ்சாவடி, வடலூர், மருவாய், பில் லாலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் அறுவடை செய்யப்படாத இன்னும் 4, 5 தினங்களில் அறுவடை செய்ய தயாரான நிலையில் உள்ள நெற் பயிர்கள் மழையால் கதிர்கள் சாய்ந்து நிலத்தில் படுத்து விட்டது. இப்படிப்பட்ட நிலங்களில் இனி மெஷினை வைத்து அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளதால் மெஷினை இறக்க முடியாது.
இந்த நிலையில் ஆட்களைக் கொண்டுதான் அறுவடை செய்ய வேண்டும். ஆனால் தற்போது விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக் குறை உள்ள நிலையில் அறுவடைக்கு ஆட்கள் கிடைத்து உரிய காலத்தில் அறுவடை செய்ய முடியுமா என விவசாயிகள் மத் தியில் கேள்வி எழுந் துள் ளது. இதே நிலை நீடித் தால் நிலத்தில் சாய்ந்த நெற் பயிர்களில் உள்ள நெல் மணிகள் உதிர்ந்து முளைக்கத் துவங்கி விடும்.
ஏற்கனவே பருவம் தவறிய மழை மற்றும் புகையான் தாக்குதலாலும், ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிடப் பட்ட "பிபிடி' ரக விதை நெல்லில் ஏற்பட்ட கலப்படத்தாலும் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி மழையில் நனைந்து நிறம் மாறுவதாலும் அறுவடை செய்தாலும் குறைந்த விலைக்குத் தான் விற்க முடியும். நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் எடுப்பதாக இருந்தால் கூட 22 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். ஆனால் தற் போது 15 சதவீதம்தான் இருக்கிறது. ஈரப்பதம் அதிகமானால் லாபம் கிடைக் கும். குறைந்தால் நஷ்டம் ஏற்படும் என்ற நிலையில் ஈரப்பதத்தின் சதவீதத்தை கூட்ட நெல்லை காய வைக்க களம் கூட இல் லாத நிலை உள்ளது.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் "எந்த ஆண் டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு நெல் பயிரிட்ட விவசாயிகள் பல் வேறு இன்னல்களை சந்திக்க நேர்ந்துள்ளது. இதுவரை அறுவடை செய் துள்ள விவசாயிகள் 50 சதவீதம் நஷ்டத்தை சந்திக்க நேர்ந்துள்ளது. மழை இன்னும் நீடித்தால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலை ஏற்படும்' என சோகத்துடன் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக