உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

திருமானிக்குழி ஆற்றுப்பாலம் முறையாக சரி செய்யப்படுமா?

நெல்லிக்குப்பம் :

                          திருமானிக்குழி பாலத்தை முறையாக சரி செய்யாததால் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் ரூபாய் பாழாகிறது. நெல்லிக்குப்பம் அடுத்த திருமானிக்குழி கெடிலம் ஆற்றில் தரைப் பாலம் உள்ளது. இப்பாலம் வழியே திருமானிக் குழி, ராமாபுரம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். பாலத்தின் தென்கரையில் ஆற்றுப்பகுதி மேடாகவும், வடகரை பள்ளமாகவும் உள்ளது. வெள்ளம் வரும்போது தண்ணீர் முழுவதும் வடகரை வழியே வேகமாக செல்வதால் உடைப்பு ஏற்படுகிறது.

                 இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெள்ளம் வந்தபோது வடகரையில் பாலம் உடைந்தது.  10 லட்சம் ரூபாய் செலவு செய்து சிமென்ட் பைப்புகளை அமைத்து சரி செய்தனர். கடந்த ஆண்டும் அதே இடம் சேதமடைந்தபோது 25 லட்சம் ரூபாய் செலவு செய்து சரி செய்தனர். கடந்த மாதம் வெள்ளம் வந்தபோது அதே இடத்தில் புதைத்த பைப்புகள் உடைந்ததால் பஸ், கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

                      ஆற்றில் தென்கரையில் உள்ள மணல் மேட்டை குறைத்து பாலம் நீளத்துக்கும் சீராக தண்ணீர் செல்ல வழி செய்ய வேண்டும். அடுத்ததாக மண் கொட்டி சரி செய்த பிறகு இருபுறமும் கருங்கல் சுவர் அமைக்க வேண்டும்.  இதுபோன்று முழுமையாக பணி செய்தால் தான் வரும் ஆண்டுகளில் பாலம் உடைவதை தடுக்க முடியும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior