கடலூர்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.டி. கத்தரிக்காயைத் தடைசெய்ய வலியுறுத்தியும், உர மானியத்தை குறைத்ததற்கு மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகில நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க கடலூர் மாவட்டத் தலைவர் எம்.நாராயணன் தலைமை தாங்கினார். மத்திய செயற்குழு உறுப்பினர் கே.முகமது அலி கண்டன உரை நிகழ்த்தினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் எஸ்.காமராஜ், என்.ஆர்.ராமசாமி, எஸ்.தட்சிணாமூர்த்தி, ஏ.சந்திரசேகரன், ஆர்.லோகநாதன், எம்.மணி, கே.தனபால், ஆர்.இளம்பாரதி, பி.பாலமுருகன் உள்ளிட்ட பலர் பேசினர். கடலூர் ஒன்றியத் தலைவர் சி.குமார் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக