கடலூர்,:
கடலூர் அருகே வழிசோதனைப் பாளையத்தில் மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் ஒரு வீடு சூறையாடப்பட்டது. 100 வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. கடந்த 18-ம் தேதி தனி நபர்களுக்கு இடையே எழுந்த பிரச்னை காரணமாக, கடலூர் அருகே நாயக்கர் நத்தம் காலனியைச் சேர்ந்தவர்களுக்கும் வழிசோதனை பாளையத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு மோதல் ஏற்பட்டது. இதில் நாயக்கர் நத்தம் காலனியைச் சேர்ந்த 7 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 41 பேர் மீது கடலூர் முதுநகர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, வழிசோதனைப் பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் உள்ளிட்ட 39 பேரைக் கைது செய்தனர். கைதான சுப்பிரமணியத்தை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்த போலீஸôர் அழைத்துச் சென்றனர். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்க்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். ÷இ தற்கிடையே சுப்பிரமணியத்தின் மனைவி ஆச்சி, கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார். அதில் நயாக்கர் நத்தம் காலனியைச் சேர்ந்த 17 பேர் தனது வீட்டில் புகுந்து, கணவரைத் தாக்கியதாகவும், வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி, கணினி கருவிகள், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட பொருள்களைச் சேதப்படுத்தியதாகவும், தனக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த 100 வாழை மரங்களை வெட்டிச் சாய்த்ததாகவும் கூறியுள்ளார். இந்தப் புகாரின் பேரில், நாயக்கர் நத்தம் காலனியைச் சேர்ந்த இருசப்பன், ஸ்ரீதர், சிவக்கொழுந்து உள்ளிட்ட 17 பேர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். மோதல் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.÷வ ழிசோதனைப்பாளையம் கிராமத்தினர் மற்றும் நாயக்கர் நத்தம் காலனியைச் சேர்ந்தவர்களிடையே அமைதியை ஏற்படுத்த இரு தரப்பினரையும், அரசு அலுவலர்கள் திங்கள்கிழமை பேச்சு வார்த்தைக்கு அழைத்து இருந்தனர். ஆனால் இரு தரப்பினரும் பேச்சு வார்த்தைக்குச் செல்லவில்லை. இதனால் பேச்சு வார்த்தை தள்ளி வைக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக